search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்துக் கட்சிகள்"

    தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. #ParliamentElection #ElectionCommission #AllPartyMeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்று தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

    இதற்கிடையே பாராளுமன்றத் தேர்தலில் அதிக அளவு பெண்களை பங்கு பெற வைப்பது, கட்சிகள்- வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவை குறைத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்வது, இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்வது உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியும். எனவே அரசியல் கட்சிகளிடம் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

    இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று டெல்லியில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில்  தம்பிதுரை பங்கேற்கின்றனர்.



    இக்கூட்டத்தில் மொத்தம் 8 வி‌ஷயங்கள் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி கருத்து கேட்க தேர்தல் ஆணையர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக தேர்தலில் பெண்களை அதிக அளவில் பங்கு பெறச் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. மேலும் தேர்தலில் செலவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது. இதன் மூலம் வேட்பாளர்கள் தங்களது கருப்புப் பணத்தை தண்ணீராக செலவு செய்வதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும் என்று கருதுகிறது.  #ParliamentElection #ElectionCommission #AllPartyMeeting
    நாளை அனைத்துக்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #sterliteprotest
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடந்தது. இதில் பலர் உயிர் இழந்தனர்.

    இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நேற்று நடந்தது.

    இன்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

    துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கத்தினர் இன்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினார்கள்.

    நாளை தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன.



    நாளை பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  #sterliteprotest

    ×